×

தஞ்சாவூரில் இளநீர் விற்பனை மும்முரம்: அலைமோதும் மக்கள் கூட்டம்

தஞ்சாவூர், மே.1:வெயிலின் தாக்கம் அதிகரிப்பால் தஞ்சாவூரில் பல்வேறு பகுதிகளில் இளநீர் விற்பனை மும்முரமாக நடைபெறுகிறது. இதில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது. கடுமையான வெயிலின் தாக்கத்தால் இளநீரின் கடைகளில் பொதுமக்கள் இளநீரை அதிக அளவில் வாங்கி அருந்துகின்றனர். தமிழ்நாட்டில் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பல்வேறு மாவட்டங்களில் வெயில் சதமடித்து வருகிறது. தமிழகத்தில் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ளது. தினமும் காலை முதல் மாலை வரை வெயில் வாட்டி எடுக்கிறது.வெயிலினை கருத்தில் கொண்டு, உடலினை குளிர்ச்சியாக்கவும், நீர்நடுநிலைத் தன்மையை கட்டுக்குள் வைக்கவும் பொதுமக்கள் அதிகளவில் பழங்கள் மற்றும் அதனைச் சார்ந்த குளிர்பானங்களை பருகி வருகின்றனர்.

இதனால் பழங்களின் தேவை அதிகமாகி வருகிறது. மேலும் விலையும் நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. அந்த வகையில் இயற்கையாக கிடைக்கக்கூடிய, நம் தாகத்தை தணிக்க கூடிய இளநீர், நொங்கு போன்றவற்றின் தேவை பொதுமக்களிடையே தேவைப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இளநீர் நுங்கு கடைகள் அதிகரித்துள்ளது. இருசக்கர வாகனம் நான்கு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் இல்ல இளநீர் கடையை பார்த்தவுடன் இறங்கி இளநீர் குடித்துவிட்டு செல்கிறார்கள். வெயிலின் தாக்கம் வரும் மாதங்களில் மேலும் அதிகரிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கோடை வெப்பத்தில் இருந்து தங்களை தற்காத்துக்கொள்ளவதற்கு, உடல் உஷ்ணத்தை குறைக்கும் இளநீர், பலவிதமான பழச்சாறுகள், கூழ், கரும்புச் சாறு போன்றவற்றை பொதுமக்கள் விரும்பி அருந்துவதால், இவற்றின் விற்பனை அதிகரித்துள்ளது.சாதாரண நாட்களில் ரூ.40க்கு விற்கப்பட்ட செவ்விளநீர் தற்போது ரூ. 50 வரை விற்பனையாகிறது. பொள்ளாச்சியில் இருந்து அதிக அளவில் இளநீர் இறக்குமதி செய்யப்பட்டு அதிக அளவில் விற்பனை நடைபெற்று வருகிறது. மேலும் தர்பூசணி, எலுமிச்சை போன்றவற்றின் விலைகளும், பழங்களின் விலையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

The post தஞ்சாவூரில் இளநீர் விற்பனை மும்முரம்: அலைமோதும் மக்கள் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Tanjavur ,Thanjavur ,Tamil Nadu ,
× RELATED தஞ்சாவூர் அருகே சூரக்கோட்டையில் பொங்கல் கரும்பு சாகுபடி பணி